• Sat. Apr 20th, 2024

இன்று பூமியை நோக்கி வரும் எரிகல்… ஆபத்து ஏற்படுமா?

ByA.Tamilselvan

Sep 2, 2022

பூமியை நோக்கி வேகமாக வரும் எரிகல்லால் ஆபத்து ஏற்படுமா ? என்றகேள்விக்கு விஞ்ஞானிகள் பதில் அளித்துள்ளனர்.
பூமியை நோக்கி அவ்வப்போது எரிகற்கள் வருவது இயல்பான ஒன்றுதான். ஆனால் அவை சிறியதாக இருக்கும் பட்சத்தில் பூமியல் மோதுவதற்கு முன்பாகவே அவை சாம்பலாகிவிடும். ஆனால் சில சமயங்களில் மிகபெரிய விண்கல் பூமியை நோக்கி வரும் நேரத்தில் அவை பூமியில் மோதி ஆபத்தை ஏற்படுத்தும். சிலசமயங்களில் பூமியின் மீது விண்கற்கள் மோதியுள்ளன.
தற்போது 2022QN5என்று பெயரிடப்பட்ட எரிகல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சமீபத்தில் எச்சரித்திருந்தது.அந்த எரிகல் இன்று மிக அருகில் பூமியை கடந்துசெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூமியிலிருந்து சுமார் 80 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் கடக்கும் இந்த எரிகல் தன்னுடைய சுற்றுவட்டப்பாதையிலிருந்து சற்று விலகினாலும் கூட அதுபூமிக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்று நாசா எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *