சிவகாசி பேருந்து நிலையம் அடுத்துள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டி மூலப் பொருளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக கரும்புகை சூழ்ந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

பல அடி உயரத்திற்கு விண்ணை முட்டும் அளவில் கரும்புகைகள் சூழ்ந்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த கட்டிடம் யாருக்கு சொந்தமானது, உரிய அனுமதியுடன் தீப்பெட்டி தயாரிப்பு மூலப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.