சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் குளிர்பான கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு, பற்றி எரியும் நெருப்பால், அங்கிருக்கும் பொருட்கள் வெடித்து சிதறுவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தீவிபத்து காரணமாக குடோனில் இருந்து அதிகளவில் கரும்புகை வெளியேறுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தீவிபத்தில் உயிர் சேதங்கள் ஏதேனும் நிகழவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குடோனில் எரிந்து வரும் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்தும் பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீயை முழுமையாக அணைத்த பிறகே சேதமான பொருட்களின் விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
குளிர்பான கிடங்கில் தீ விபத்து
