• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் நள்ளிரவில் தீ விபத்து, சாலையில் நின்று கொண்டிருந்த 6 இருசக்கர வாகனம் தீயில் கருகி சேதமடைந்தன – போலீசார் விசாரணை

ByN.Ravi

Mar 4, 2024

மதுரை எல்லீஸ் நகர் போடி லைன் பகுதியில், உள்ள சூர்யா அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் மணி என்பவரின் மகன் முத்துராஜ்(வயது 26). லோடுமேன் ஆக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு மணி மற்றும் முத்துராஜ் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், முத்துராஜ் தந்தையிடம் கோபித்துக்
கொண்டு வீட்டின் அருகே நின்று சிகிரெட் குடித்து அணைக்காமல் அப்படியே போட்டு சென்றுள்ளார். சிகரட்டில் அணைக்காமல் இருந்த தீப்பொறிகள் அங்கிருந்த காய்ந்த இலைகளில் பற்றி திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த ஆறு இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சைக்கிள்கள் தீயில் கருகி சேதம் ஆகின.
இது அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, சம்பவம் குறித்து மதுரை எஸ். எஸ். காலனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.