• Fri. Jan 17th, 2025

மதுரை மாவட்ட ஏஐடியூசி அப்பள தொழிலாளர்கள் சங்க பேரவை கூட்டம்

Byகுமார்

Mar 3, 2024

மதுரை மாவட்ட ஏஐடியூசி அப்பள தொழிலாளர்கள் சங்க பேரவை கூட்டம் துவங்கப்பட்டது. தலைவராக கோ.பாலன், துணை தலைவராக கரிகாலன், செயலாளராக எம்.பாலமுருகன், துணை செயலாளராக மும்தாஜ், பொருளாளராக சத்தியமூர்த்தி தேர்வு செய்யப்பட்டனர்.

அப்பள தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளாக கீழ்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றபட்டது.

கடந்த ஏழு வருடங்களாக கூலி உயர்வு உயர்த்தப்படவில்லை. இன்று மதுரை முழுவதும் பனிரெண்டாம் அப்பள தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் கடமை. எனவே அப்பள தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு கிடைக்காத காரணமாக இத்தொழிலாளர்கள் மாற்று தொழில் தேடி செல்கின்றனர். இதை உணர்ந்து உற்பத்தியாளர்கள் வியாபரிகள் அப்பள தொழிலாளர்களின் நியாயமான கூலி உயர்வுக்கான பேச்சு வார்த்தைக்கு சங்கங்களை அழைத்து பேச தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும்.

இப்பொழுது மாநிலம் தாண்டி உலகம் முழுவதும் அப்பள வியாபாரம் நல்ல முறையில் வியாபாரம் வளர்ச்சியாகி வருகிறது. இதை உற்பத்தியாளர்கள் கணக்கில் கொண்டு கூலி உயர்வு அவசியம் வழங்க வேண்டும்.

வீசைக்கு குறைந்த பட்சம் ரூபாய் நாற்பது வழங்க வேண்டும். மிஷின் உற்பத்தியில் அப்பளம் கிலோ ஒன்றுக்கு ரூபாய் இருபத்தைந்து வழங்க வேண்டும்.
தின கூலி பெண்களுக்கு ரூபாய் அறுநூறு, ஆண்களுக்கு ரூபாய் தொள்ளாயிரம் வழங்கிட வேண்டும் .

மத்திய மாநில அரசாங்கங்கள் அப்பள தொழிலில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் மூல பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

அப்பள தொழிலில் ஈடுபட்டுள்ள அப்பள தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு, அறுபது வயது நிறைவடைந்த தொழிலாளர்களுக்கு நலவாரியம் ரூபாய் ஐந்தாயிரம் வழங்கவும், இலவச வீடுகள் வழங்க வேண்டும் என கோரிக்கைைள் பேரவை கூட்டத்தில் நிறைவேற்ற பட்டன.
இந்த கூட்டத்தில் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முருகன், துணை செயலாளர் சி.தாமஸ், ஏஐடியூசி கட்டட சங்க மாவட்ட பொதுச்செயலாளர் இருளாண்டி, மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு பகுதி செயலாளர் பா.சுமதி, மற்றும் அப்பள தொழிலாளர்கள், ஏஐடியூசி நிர்வாகிகள் பேரவையில் பங்கேற்றனர்.