• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தீ விபத்து..!

Byவிஷா

Nov 20, 2023

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 40 படகுகள் எரிந்து சேதமடைந்துள்ளது.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 40க்கும் மேற்பட்ட மீனவர்களின் படகுகள் எரிந்து சேதமடைந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயணை அணைக்க போராடி வருகின்றனர். மேலும், படகில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா எனவும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. படகு அனைத்தும் எரிந்து நாசமானதால் மீனவர்கள் கடற்கரையில் குவிந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து, காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், ஒரு படகில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த மற்ற படகுகளுக்கும் பரவியிருந்தது தெரியவந்துள்ளது. மர்ம நபர்கள் யாராவது படகுகளுக்கு தீ வைத்தார்களா அல்லது தொழில் போட்டியில் படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.