நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதை தொடர்ந்து முதல் நாளான இன்று நண்பகல் 01: 28 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் ர.லட்சுமணன் விருதுநகரில் உள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜான்சன் தேவசகாயம் அவர்களிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு லட்சுமணன் பேட்டி அளிக்கும் போது விருதுநகரில் போட்டியிடும் நான் வெற்றி பெற்றால் விருதுநகருக்கு சட்ட கல்லூரி, கலை கல்லூரி, உடற்பயிற்சி கூடம், பூரண மது விலக்கு,மற்றும் பொது மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்ய பாடுபடுவேன் என்று கூறினார்.




