



காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியதிற்கு உட்பட்ட விட்டனேரி கிராம பொது மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாலையை மறித்து வேலி அமைத்து, இராட்சத போர்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியதிற்கு உட்பட்ட விட்டனேரி கிராம பொது மக்கள், காளையார் கோவில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தித்து, மக்கள் பயன்படுத்தும் அரசு சாலையை சிலர் மறித்து வேலி அமைப்பதாகவும், அரசு உரிய அனுமதி இல்லாமல் இராட்சத போர்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஊராட்சி தலைவர் வரதராஜன் தலைமையில் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் விட்டனேரி கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், தங்கள் கிராமத்தில் இருந்து அய்மம்பட்டி கிலுவச்சி கிராமத்திற்கு செல்வதிற்கு சுமார் 12 மீட்டர் அகலமுள்ள மண் சாலை உள்ளது.


தற்பொழுது அந்த சாலையில் அரசு மெட்டல் சாலை அமைப்பதற்கு வேலை நடைபெற்றுக கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாலைகண்டான் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மற்றும் பெரியகருப்பன் என்பவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் நிலம் வாங்கி உள்ளதால், தற்பொழுது அவர்கள் பல நூறு வருடங்காக பயன்பாட்டில் உள்ள சாலையை ஆக்கிரமித்து முள் வேலி அமைத்துக் கொண்டு உள்ளனர்.

அரசிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் சாலையை சேதப்படுத்தியும் கிராமத்தின் குடிநீர் வாழ்வாதபமாக உள்ள குடிநீர் ஊரணியின் அருகில் அனுமதியின்றி இராட்ந்த ஆழ்துளை கிணறு அமைத்து வருகின்றனர். இதனால் தங்களின் குடிநீர் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சாலை ஆக்கிரப்பை அகற்றித்தருமாறு கேட்டுள்ளனர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

