• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தங்கும் விடுதியில் பெண் உயிரிழப்பு; பெண்ணின் கொழுந்தனாரிடம் விசாரணை

சேலம் மாவட்ட ஏற்காடு தனியார்  தங்கும் விடுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் கொழுந்தனாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விஜய் தனது அண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அண்ணி மஞ்சுவோடு திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, விஜய்க்கு திருமணம் நிச்சயக்கப்பட்டது.

இந்த நிலையில் விஜய் தனது அண்ணியோடு ஏற்காட்டில் உள்ள தனியார் விடுதிக்கு வந்து தங்கியுள்ளார். நேற்று காலை அறை எடுத்த இன்று காலை மஞ்சு குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக விஜய் ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டனர்.

தொடர்ந்து விஜய் இடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணத்தை மீறிய உறவால் தனிமையில் தங்கியிருந்த இருவருக்குமிடையே பிரச்னை எழுந்த நிலையில் மஞ்சு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்..