• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்த வீரருக்கு பாராட்டு விழா..,

BySeenu

Oct 13, 2026

கோவை ராக்ஸ் விளையாட்டு அகாடமி சார்பில் ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்த வீரருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் அவரது சாதனைப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள், டாக்டர் புல்லேலா கோபிசந்த் மற்றும் அவரது குழுவினர், ராக்ஸ் பள்ளி மற்றும் விளையாட்டு அகாடமியின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ஸ்வேதா கிருஷ்ணமூர்த்தி, பேட்மிண்டன் குருகுல், தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கங்கள் மற்றும் ஆதரவாளர்களின் பங்களிப்பு நினைவுகூரப்பட்டது.

2017-ஆம் ஆண்டு ராக்ஸ் விளையாட்டு அகாடமியில் தொடங்கிய அவரது பயணம், 2023-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் புல்லேலா கோபிசந்த் அகாடமியில் தொடர்ந்தது. ஆனைமலைஸ் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கிய ஆதரவும், பேட்மிண்டன் குருகுலின் ஒத்துழைப்பும் அவரது சர்வதேசப் பயணத்திற்கு முக்கியப் பங்களிப்பை வழங்கின.

ஹரிஹரனின் சாதனை இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிப்பதுடன், திறமைகளை அடையாளம் கண்டு முறையான பயிற்சியும் தொடர் ஆதரவும் வழங்குவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது.

ஹரிஹரன் அம்சகருணன் கூறுகையில்,

ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற தமிழ்நாட்டின் முதல் பேட்மிண்டன் வீரர் நான் தான். இந்தச் சாதனை எனது தனிப்பட்ட முயற்சியால் மட்டும் சாத்தியமானதல்ல. எனக்குத் தொடர்ந்து பயிற்சி அளித்து வழிகாட்டிய ராக்ஸ் விளையாட்டு அகாடமி பயிற்சியாளர்கள், டாக்டர் புல்லேலா கோபிசந்த் மற்றும் அவரது குழுவினர், பேட்மிண்டன் குருகுல், எனக்கு ஆதரவளித்த ஆனைமலைஸ் மோட்டார்ஸ் நிறுவனம் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது விளையாட்டுப் பயணத்தில் ஊக்கமளித்து, சர்வதேச அளவில் சாதிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தந்த அனைவருக்கும் இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன். எனது அடுத்த இலக்கு 2028 ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே ஒரே குறிக்கோல் ஆகும், என்று ஹரிஹரன் அம்சகருணன் கூறினார்.