இன்று ‘ஜனஜாதிய கௌரவ திவாஸ்’ என பூர்வகுடிகளை பெருமைப்படுத்தும் நாளாக மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது.’பிர்சா முண்டா’ என்ற இணையற்ற வீரனின்,மண்ணின் மைந்தனின் பிறந்த நாளை இப்படி கொண்டாட வைப்பது மேலும் சிறப்பு..
சுதந்திர போராட்டம் என்பது வெறுமனே ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மட்டுமே இல்லை. அது ஒரு பண்பாட்டு யுத்தம் என்பதை,ஜார்க்கன்ட்டில் தோன்றிய பிர்சா முண்டாவின் வாழ்கையில் இருந்துதான் நாம் பாடமாக கற்க வேண்டும்..
வெறுமனே ஆங்கிலேய அரசினை எதிர்த்தால் போதாது, அதை விட ஆபத்தானது மதமாற்றம் என்று மிஷனரி பணிகளை எதிர்த்தார் பிர்சா முண்டா. பழங்குடி மக்களை மதமாற்றுவதன் மூலம் நடப்பது பண்பாட்டு படையெடுப்பு என்பதை ஆழமாக உணர்ந்து கொண்டு தர்மயுத்தத்திற்கு தயார்படுத்தினார் மக்களை..
குரு குலமான கௌரவர்களுக்கு துணையாக நின்ற போர் சமூகமாக முண்டா பழங்குடி சமூகம் தங்களை நினைக்கிறது. இந்த தொன்மத்தை ஆழமாக நம்பிய பிர்சா முண்டா,வைணவத் துறவியான ஆனந்த் பானே என்பவரின் சிஷ்யராக ஆனார். துளசியை வணங்கி, புலால் – மதுவை நீக்கி, பூணூல் அணிந்தார்.தன் மக்களுக்கு ராமயாண, மகாபாரத கதைகளை பழையபடி கற்றுக் கொடுக்க ஏற்பாடுகளை செய்தார். ஜெஸ்யூட்டுகளால் மதம் மாற்றப்பட்ட ஆதிகுடிகளை மீண்டும் தாய் மதத்திற்கு கொண்டு வந்தார்..
ஆங்கிலேய அரசு,அதன் ஏகாதிபத்தியத்திற்கு துணையாக நின்ற ஆதிக்க ஜமீன்கள்,மதம் மாற்றம் செய்யும் மிஷனரிகள் இது மூன்றிற்கும் எதிராக பூர்வகுடிகளை ஒன்று திரட்டிய மாவீரன் பிர்சா முண்டா ஆவார்..
இன்று ஒவ்வொரு ஹிந்துவும் பிர்சா முண்டாவின் வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும்.அதை நவீன ஜனநாயக,விஞ்ஞான கண்கொண்டு பார்க்க வேண்டும்..