அ.தி.மு.க. கிழக்கு மாவட்டத்தின் சார்பாக நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில், ஒற்றுமை உணர்வுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என கழகத் தொண்டர்களுக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் பேசிய பேச்சு கூடியிருந்த அ.தி.மு.க.வினரை நெகிழ வைத்ததுதான் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.வின் ஹைலைட்டே!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் படந்தாலில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில், விருதுநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆர்.கே. ரவிச்சந்திரன் தலைமையில், சாத்தூர் நகரக் கழகச் செயலாளர் எம்.எஸ்.கே.இளங்கோவன் முன்னிலையில், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பமனு பெறப்பட்டது. விருப்பமனுக்களை விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் பெற்றுக் கொண்டு, தொண்டர்கள் மத்தியில் பேசுகையில்..,

தலைமைக்கு கட்டுப்பட்டு யாரை வேட்பாளர்களாக நிறுத்துகிறார்களோ, அவர்களை வெற்றி அடைய வைக்க எல்லோரும் ஒற்றுமையுடன் பாடுபடவேண்டும் என்றும், தி.மு.க.வை ஒருபோதும் கிழக்கு மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், பேரூராட்சிகளில் நுழைய விடக்கூடாது என்றும், தி.மு.க.வினர் செய்யும் மாயாஜால வித்தைகளுக்கெல்லாம் மயங்கி விடக் கூடாது என்றும், அவரது அண்ணன் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து பாணியில் புன்னகையோடு கட்சித் தொண்டர்கள் மத்தியில் தனது உரையை முடித்தார்,
நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சாத்தூர் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் கே.எஸ்.சண்முகக்கனி, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் தங்கவேல், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ஆர்.முருகன், சாத்தூர் நகர் மன்ற முன்னாள் துணைத் தலைவர் சி.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.சி.முனீஷ், சாத்தூர் முன்னாள் நகரச் செயலாளர் கே.சி.மணி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், சாத்தூர் நகர இளைஞர் பாசறை கனகராஜ், நகர இளைஞரணிச் செயலாளர் கார்த்திக், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் துணைச் செயலாளர் யூனஸ் முகம்மது, நகர மகளிரணிச் செயலாளர் வீரலட்சுமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் துணைத் தலைவர் ஜி.ஆர்.டி.சுப்புராஜ், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்டப் பொருளாளர் ராமலிங்கம், பார்த்தசாரதி, ஈஸ்வரன், குமார், குருசாமி, சுரேஷ், ஸ்டெல்லாமேரி, செல்வம், ரத்தினம், கஸ்தூரி மற்றும் கழகப் பிரமுகர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
எது எப்படியோ விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சித் தேர்தலுக்கான அ.தி.மு.க, தி.மு.க.வினரின் பணிகள் களைகட்ட ஆரம்பித்து விட்டன.