• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடியால் மத்திய விசாரணைக் குழு அலசல்

Byகாயத்ரி

Jan 7, 2022

பஞ்சாப் பயணத்தின் போது பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குளறுபடிகள் நிகழ்ந்தது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இந்த விசாரணைக் குழு இன்று பஞ்சாப் மாநிலத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளது.

முதல்கட்டமாக ஃபெரோஸ்பூர்-மோகா நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தை அடைந்த விசாரணை குழுவினர், அங்கு பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனம் நிறுத்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர்.இதை அடுத்து பஞ்சாப் காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளை சந்திக்கும் மத்திய குழு எந்த இடத்தில் தவறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்கிறது.

இதனிடையே பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி குறித்து உச்சநீதிமன்றத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.பிரதமர் பாதுகாப்பு குளறுபாடி தொடர்பாக பஞ்சாப் அரசும் உயர்மட்ட விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளது. பஞ்சாபில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் பாதுகாப்பு குளறுபடி தொடர்பான பிரச்சினை பஞ்சாப் மாநில அரசியலில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.