• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மத்திய அரசு அனுமதி

Byமதி

Nov 10, 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்க மத்திய அமைச்சரவை மீண்டும் அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இன்று தெரிவித்தார்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதில் அவர், எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிகழ்வாண்டிற்காக மீதமுள்ள மாதங்களில் செலவழிக்க ஒரே தவணையாக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்படும். அடுத்த நிதியாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 5 கோடி இரண்டு தவணைகளாக விடுவிக்கப்படும்” என்றார்.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.