சிந்தனை துளிகள்
1. உடல் ஓரிடத்திலும், மனம் மற்றொரு இடத்திலும் இருந்தால் வாழ்வில் ஒருவன் எவ்வித முன்னேற்றமும் பெற முடியாது.
2. பிறர் உன்னை இம்சிக்கும் போது பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று எண்ணுவது கூடாது.
3. ஆசை எப்போது அற்றுப் போகிறதோ அப்போதே கடவுளின் அருளுக்குப் பாத்திரமாகி விட்டதை உணர முடியும்.
4. ஆன்மிகத்திற்கு அவசியம் அடக்கம். தன்னடக்கம் கொண்டவன் இருக்கும் இடத்தில் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கும்.
5. கடவுள் ஒரு செயலையும் செய்வதில்லை. ஆனால், அவனின்றி உலகில் ஓர் அணுவும் அசைவதில்லை.
6. எப்போதும் கடவுள் சிந்தனையில் மனம் லயித்துவிட்டால், சுயநல எண்ணம் சிறிதும் உண்டாகாது.
7. வெறுமனே கடவுளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது ஆன்மிகம் ஆகாது. அது கடவுளோடு இரண்டறக் கலப்பதாகும்.
8. எப்போதும் கடவுள் சிந்தனையில் ஆழ்ந்திருங்கள். அன்புடன் சமூகசேவை செய்யுங்கள். அனைத்து உயிர்களையும் நேசியுங்கள். தெய்வீகவாழ்வுக்கு இவையே தேவை.
9. தினமும் தெய்வீக நூல்களை சிறிது நேரமாவது படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
10. ஆன்மிகத்துறையில் விரைவாக முன்னேற அகிம்சை, சத்தியம், பிரம்மச்சரியத்தை கடைபிடியுங்கள்.