• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Sep 15, 2023

சிந்தனைத்துளிகள்

வாழ்க்கை மற்றும் மந்திரச் சொற்கள்…!

மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்!

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.

  1. போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.
  2. நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.
  3. உடைந்தால் என்ன? வேறு வாங்கிவிட்டால் போச்சு.
  4. பஸ்ஸ{ போயிடுச்சா, அதனால் என்ன? அடுத்த பஸ் இருக்கு, இல்லையா?
  5. பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல
  6. சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?
  7. அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான்.அதையெல்லாம்
    கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பொழுதுதான் உனக்கு நிம்மதி.
  8. இதெல்லாம் சிறிய விஷயம். இற்காகவா கவலைப்படுகிறது…
  9. கஷ்டம் தான் … ஆனால் முடியும்.
  10. நஷ்டம் தான் … ஆனால் மீண்டு வந்துவிடலாம்.
  11. இதில் விட்டால் மற்றொன்றில் எடுத்துவிட மாட்டேனா?
  12. விழுந்தால் என்ன? எழுந்திருக்க மாட்டேனா?
  13. விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.
  14. உட்கார்ந்து கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதப் பார்.
  15. இவன் இல்லை என்றால் வேறு ஒருவன் இல்லையா?
  16. இந்த வழி இல்லை என்றால் வேற வழி இல்லியா?
  17. இப்பவும் முடியவில்லையா? சரி. மீண்டும் ஒரு முயற்ச்சி…
  18. இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசித்தால் வழி தெரியுமே.
  19. முடியுமா என்று நினைக்காதே. முடியணும் என்று நினை.
  20. கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இதை விட நல்லதாகவே கிடைக்கும்.
  21. அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.
  22. விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதற்க்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.
  23. திரும்பத் திரும்ப அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.
  24. சும்மா யோசித்துக்கொண்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டென்று
    வேலையை ஆரம்பி.
  25. ஆஹா, இவனும் அயோக்கியன் தானா?
    சரி, சரி. இனிமேல் எல்லோரிடமும் நான்கு மடங்கு ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும்.
  26. உலகத்தில் யார் அடிபடாதவன்? யார் ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும்,
    அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?
  27. ஊரில் ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?
  28. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.
  29. எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?
  30. அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி இல்லையா?
  31. அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே போதும்.
  32. நாலு காசு பாக்குற நேரம். கண்டதப் பேசிக் காலத்தைக் கழிக்கலாமா?

ஆம், நண்பர்களே,

வீழ்வது கேவலமல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்....

முயற்சியுடன் எழுந்திடுங்கள்! உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள்.