பொன்மொழிகள்
1. “நமது இலட்சிய வழியில் குறுக்கிடும் முட்டுக் கட்டைகளை கண்டு பதறாமல்.. அவைதான் நமது பாதையை ஒழுங்குபடுத்தவும்.. நமது பயணத்தை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன என புரிந்து முன்னேறுவோம்.!”
2. “விரும்பியதை அடைய எப்போதும் போராட வேண்டி இருக்கும்.. அந்த போராட்டம் தான் உன் விருப்பத்தின் மதிப்பை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டும்.!”
3. “வாழ்க்கையில் வாழ வழியில்லை என்று புலம்பாதீர்கள்.. நீங்கள் போகும் பாதைதான் வாழ்க்கை என்பதை மறந்து விடாதீர்கள்.!”
4. “வெற்றி என்பது பெரிதாய் ஒன்றுமில்லை.. நீங்கள் செய்யும் செயலில் திருப்தியும் மகிழ்ச்சியும் நிறைந்து இருந்தால் அதுவே உங்களின் வெற்றி.!”
5. “எதிர்த்துப் பேசவும் கற்றுக்கொள்ளுங்கள்.. இல்லையேல் எம் பக்கமும் ஒரு நியாயம் இருக்கும் என்பதை மறந்து விடுவார்கள்.”
6. “அடுத்த நொடியில் உன் வாழ்க்கை மாறலாம்.. அதற்காக உழைப்பதை ஒருபோதும் நிறுத்தாதே.”