

பொன்மொழிகள்
1. தீயவற்றின் உற்பத்தி சாலை இதயம்.. தீயனவற்றை விற்கும் இடமே நாக்கு.
2. நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது.. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது.. நீ துணிவு உள்ளவனாக இருந்தால் அச்சம் வராது.
3. பயத்தை மனதிற்குள்ளேயே பயிர் செய்பவன் பாம்பை மனதில் வளர்க்கிறான்.
4. ஓர் ஏழையின் செல்வம் அவனது திறமை தான்.
5. ஒவ்வொன்றும் அழகுடையதே. ஆனால் எல்லோர் கண்களும் அதைக் காண்பதில்லை.
6. அறிஞர்கள் சிந்தனை செய்யாதிருந்து அறிவிலிகள் ஆகிறார்கள்.. அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர்கள் ஆகுகிறார்கள்.
7. மனதைக் கடமையில் செலுத்துங்கள்.. ஒழுக்கத்தை கடைப்பிடியுங்கள்.. அன்புக்கு கட்டுப்படுங்கள்.. மேலான கலைகளில் மனதை செலுத்தி அமைதி பெறுங்கள்.
8. உன்னத நெறிகளையும், உயர்ந்த மதியும், நேர்மையும் கொண்டவரே உயர்ந்த மனிதர்.
9. புகழைப் பொருட்படுத்தாதீர்கள், ஆனால் புகழ் பெறுவதற்கு தகுதி உடையவராக உங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
10. நேர்மையும் சத்தியமுமே ஒவ்வொரு பண்புக்கும் அடிப்படை.
