• Mon. Oct 19th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Feb 7, 2023

சிந்தனைத்துளிகள்

வாழ்க்கைச் சக்கரத்தில் துன்பம் என்ற துரு பிடிக்கத்தான் செய்யும்.
அது சக்கரத்தை உருளச் செய்யும் பொருட்டு துணிவு என்ற எண்ணெயை அவ்வப்போது இடுவதோடு, நம்மைச் சார்ந்தவர்களுடைய சக்கரங்களுக்கும் இட்டால்தான் வாழ்க்கை என்ற வண்டி பழுதின்றி ஓடும் என்று உருண்டோடும் வண்டிக்கு ஒப்பாக வாழ்க்கையை உருவகப்படுத்துவது சிறப்பு. இரும்பு என்றாலே துருப்பிடிக்கத்தானே செய்யும். மரம் என்றால் கரையான் அரிக்கத்தான் செய்யும். அதுபோல, வாழ்க்கையும் இன்பமும், துன்பமும் கலந்துதானே இருக்கும் என்ற உண்மையை உணர்ந்தோமென்றால், துன்பமும், இன்பமும் எதுவும் நிரந்தரமல்ல. சக்கரம் போல சுழன்று மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை என்ற சூட்சுமம் தெரிந்து கொண்டால் துன்பங்கள் நம்மைத் துரத்தாது.