• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Dec 24, 2022

சிந்தனைத்துளிகள்

இரண்டு வார்த்தைகளில் சொல்லவேண்டிய விஷயத்தை
ஒரே வார்த்தையில் சொல்ல முடிந்தால்
அதுதான் விலைமதிக்க முடியாத திறமை.

நெருக்கடி நிலையிலும் நிதானமிழக்காமல்
அமைதியாக முடிவெடுப்பது
உற்சாகமான சூழ் நிலையில்
சம நிலை இழக்காமல் இருப்பது
யாரையும் திருப்திபடுத்த
தனக்கு விருப்பமில்லாத செயல்களில் ஈடுபடாமலிருப்பது
இவையே உண்மையான தலைவனின் குணாதிசயங்கள்.

உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைய வேண்டுமென்றால்,
ஒருவருக்கு நல்ல மகளாக வாழும் ஒருவரை திருமணம் செய்துகொள்ளுங்கள்.

மின்மினிப்பூச்சி பறக்கும்போதுதான் பளபளக்கிறது.
மனிதன் சுறுசுறுப்போடு இயங்கும்போது தான் பிரகாசிக்கிறான்.

நீண்ட தூக்கத்தைவிட
ஆழ்ந்த தூக்கத்திலேயே அதிக நன்மை உள்ளது.

திருமணம் செய்து கொள்வதற்கு முன்
கண்களை நன்றாகத் திறந்து வை.
அதன்பின் பாதிக்கண் மூடியிருக்கட்டும்.

அன்பு தலைமுடியைப் போன்றது.
வெட்ட வெட்ட முன்னிலும் அதிகமாய் அது வளரும்.