• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Mar 11, 2023

சிந்தனைத்துளிகள்

மதகுரு ஒருவர் விமானமொன்றில் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பயணித்துக் கொண்டிருந்த போது பணிப்பெண் எல்லாருக்கும் வரவேற்பு பானமாக விலை உயர்ந்த மதுபானத்தைக் கொடுத்து உபசரித்தபடி வந்து கொண்டிருந்தார்.
அவ்வாறே பணிப்பெண் மதகுருவிடமும் மதுக் கோப்பயை நீட்டினார்.அவர் வாங்க மறுத்து விட்டார்.
அதற்கு பணிப் பெண்,”ஐயா ,எங்கள் விமானத்தில் பயணிக்கிற ஒவ்வொருவருக்கும் நாங்கள் கொடுக்கும் உயர்தர மரியாதை இது.ஏற்றுக் கொள்ளுங்கள் ” என்றார்.
அதற்கு மதகுரு,”அம்மா, உங்கள் அன்புக்கு நன்றி. இது எனக்கு வேண்டாம் ” என்றார்.
பணிப்பெண் விடுவதாய் இல்லை, ”உலகிலேயே விலை உயர்ந்த மது வகை இது.கொஞ்சம் குடித்தால் அப்புறம் விடவே மாட்டீர்கள் ” என்றார்.அப்போதும் மதகுரு ஏற்றுக்கொள்ளவில்லை.
பணிப் பெண் கடைசியாகச் சொன்னார்”இவ்வளவு தூரம் நான் சொன்னதற்காகவேனும் ஒரு துளியேனும் பருகுங்களேன்.”
அதற்கு குரு சொன்னார்,
” அம்மா, நான் ஒரு சிந்தனையாளன் மதுவெல்லாம் பருக மாட்டேன். வேண்டுமென்றால் நீங்கள் ஒன்று செய்யுங்கள். இதை விமான ஓட்டியிடம் கொடுத்து விடுங்கள்”என்றார். அவர் அப்படிச்சொன்னதும்தான் தாமதம் பணிப்பெண் அதிர்ந்துபோய் விட்டார்.
“ஐயோ,
பணியில் இருக்கிற விமானி எப்படி மது அருந்த முடியும்…?
இதை, அவர் குடித்தால் அவர் புத்தி தடுமாறி விமானம் விபத்துக்கு உள்ளாகுமே.
உயிர்கள் பறிபோகுமே ” என்று பதறினார்.
மதகுரு சொன்னார்,
”சகோதரி, வாழ்க்கையும் இப்படிப்பட்டதுதான். தகாத காரியங்களை செய்தால்

புத்தி தடுமாறி விபத்து நேரிடும். வாழ்க்கைத்தரம் என்பது மிகவும் உயர்ந்த விஷயம்.
நல்ல குணங்களுடன் இறைபக்தியுடன் வாழ்கிற வாழ்வே தரமான வாழ்வு” என்றார்