சோழவந்தான் அருகே கீழ மட்டையான் கண்மாய் நீரில் நீச்சல் பழக சென்ற தந்தை மகன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேல மட்டையான் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர் வயது 35 இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் கீழ மட்டையான் கிராமத்தில் நடைபெற்ற புரட்டாசி பொங்கல் திருவிழாவிற்கு சென்றவர்கள் அழகர் தனது மகன் ஜெகதீஸ்வரன் என்பவரை கூட்டிக்கொண்டு அருகில் உள்ள கன்மாயில் குளிக்க சென்று இருக்கிறார். அப்போது தனது நாலு வயது மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க முயன்றுள்ளார். கண்மாய் முழுவதும் நீர் பெருகியிருந்த நிலையில் கன்மாயில் ஆழம் தெரியாமல் நீரில் மூழ்கியதில் தந்தை அழகரும் அவரது மகன் நாலு வயது ஜெகதீஸ்வரன் என்பவரும் உயிர் இழந்தனர்.
இன்று காலை கண்மாய் கரைக்கு வந்தவர்கள் இரண்டு உடல்கள் கண்மாய் நீரில் மிதப்பதைக் கண்டு கூச்சலிட்டு கிராமத்தினரை அழைத்தனர். அங்கு வந்த கீழ மட்டையான் மேல மட்டையான் ஆகிய இரண்டு கிராமத்தினர் காடுபட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கி இறந்த நிலையில் இருந்த தந்தை மகன் இருவரது உடலை மீட்டு உடல் கூர் ஆய்வுக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருவிழாவுக்கு சென்றவர்கள் கண்மாய் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மேல மட்டையான் மற்றும் கீழ மட்டையான் ஆகிய இரண்டு கிராம மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறந்தவர்களின் உடலை பார்த்து மனைவி மகள்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. இறந்தவர்கள் உடல்கள் அழுகிய நிலையில் இருந்ததால் நேற்றே நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் அங்கிருந்தவர்கள் கூறினர்.