• Thu. Jan 23rd, 2025

சிற்றாறு பட்டணம் கால்வாயில் தண்ணீர் திறக்க உண்ணாவிரதம் – எம்பி, எம்எல்ஏ பேச்சு வார்த்தை..,

கிள்ளியூர் தொகுதியில் சிற்றாறு பட்டணம் கால்வாயில் தண்ணீர் திறக்க நடைபெற இருந்த உண்ணாவிரதம் எம்பி, எம்எல்ஏ பேச்சுவார்த்தை,
நீர்வளத்துறை அதிகாரிகள் முறையாக சிற்றாறு பட்டணம் கால்வாயில் திறந்து விடாத காரணத்தால் கடைவரம்பு விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டு பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. கிள்ளியூர் தொகுதி விவசாயிகளின் கோரிக்கை ஏற்று கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சிற்றாறு பட்டணம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டி கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் காங்கிரஸ் நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்களை கூட்டி இன்று காலை உண்ணாவிரதம் அறிவித்திருந்த நிலையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜோதிபாசு அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சுவாமியார் மடம் கால்வாய் மற்றும் இரணியல் நீர் மேம்பாலம் ஆகியவற்றில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திறக்க முடியவில்லை என கூறினார். 1 மாதத்தில் பணி முடிந்து திறக்க படும் தெரிவித்தார். ஆனால் மக்கள் பிரதிநிதிகள் இப்போது பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதால் பணிகளை நிறுத்தி விட்டு உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தினர். இல்லையென்றால் திட்டமிட்ட படி உண்ணாவிரதம் நடைபெறும் என கூறினார். முடிவில் நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் பேசி பராமரிப்பு பணிகளை நிறுத்தி வைத்து வரும் 1ம் தேதி திறக்கப்படும் என தெரிவித்ததையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த காங்கிரஸ் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளிடம் நன்றி தெரிவித்துக் கொண்டு 1ம் தேதி தண்ணீர் திறக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும் என திர்மானம் போடப்பட்டு கலைந்து சென்றனர்.