குமரி சின்னமுட்டம் மீனவ கிராமத்தில், விதிகளுக்கு புறம்பாக தனியார் பெட்ரோல் பங்க் திறக்ககூடாது என்ற சின்னமுட்டம் மீனவ கிராமத்து மக்களின் போராட்டம். கடந்த 17_நாட்களாக, புனித தோமையர் ஆலைய முற்றத்தில் போராட்டம் தொடரும் நிலையில். புதிதாக கட்டப்பட்ட பெட்ரோல் பங்க் நேற்று முன்தினம் (ஆகஸ்டு 23)ம் தேதி திறந்து விட்ட நிலையில். சின்னமுட்டம் பகுதியில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டு, பெட்ரோல் பங்க் திறக்கப்பட்ட பின்னும் முட்டம் மீனவ கிராமத்து மக்கள் குடும்பம், குடும்பமாக போராட்டம் தொடரும் நிலையில் போராட்ட குழு பொறுப்பாளர்கள் குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் உடன், மாவட்டம் ஆட்சியர் ஸ்ரீதரை சந்தித்து மனு கொடுத்த அடுத்த தினம் பெட்ரோல் பங்க் திறக்க பட்டநிலையில் 17_வது நாள் போராட்டத்தின் போக்கை மாற்றி புனித தோமையர் ஆலையம் முற்றத்தில் இருந்து.ஆண்கள், பெண்கள் கருப்பு கொடியுடன் ஊர்வலமாக சென்று, ஆண்களும்,பெண்களும் கடலில் இறங்கி நின்று மதியம் வரை போராட்டம் நடைபெற்றது, அதன்பின் கடற்கரை சாலையில் இருந்து போராட்டம் நடத்திய நிலையில். காவல்துறை நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் சாலை பகுதியில் இருந்து அகற்று மீண்டும் தேவாலயம் முற்றத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். சின்னமுட்டம் மீனவ கிராமத்து ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் அமைதி காப்பதற்கு எதிராகவும் இன்று எதிர்ப்பை பதிவு செய்த சின்னமுட்டம் மீனவ கிராமம் மக்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்கிற்கு எதிராக.தங்களின் கோரிக்கை வெற்றி அடையும் வரை போராட்டம் தொடரும் என போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.