• Thu. Jul 30th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

100 நாள் வேலை ஆட்களை விவசாய பணிக்கு அனுப்ப வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், 100 நாள் வேலை ஆட்களை விவசாய பணிக்கு திருப்பிவிட வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள், தங்கள் கையில் கரும்பு, மண்வெட்டி, மண்சட்டி உள்ளிட்ட விவசாய பொருட்களை ஏந்தியவாறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் தற்போது 150 நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாய பணிக்கு ஆட்கள் இல்லாமல் விவசாயமே அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.