மதுரை விமான நிலையம் அருகேயுள்ள பரம்புப்பட்டியில் விவசாயத்திற்கு வரும் மின்சாரத்தை துண்டித்ததால் 10 நாட்களாக விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சாமல் பரிதவிப்பு.
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக பரம்புபட்டி பகுதியில் சுமார் 647 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் காம்பௌண்ட் சுவர் கட்டப்பட்டு இறுதி கட்டப்பணிகள் நடைபெறுகிறது.
இந்நிலையில் பரம்புபட்டி பகுதியில் விமான நிலைய விரிவாக்க பகுதிகள் தவிர, எஞ்சிய நிலத்தில் இப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் விவசாய நிலத்தில் பயரிடப்பட்ட கத்திரி, வெண்டை, பூசணி, பீர்கன் காய், வாழை, மல்லிகை போன்ற பயிர்கள் பயிரிட்டப்பட்டது.
இந்நிலையில்மின்வாரிய அதிகாரிகள் கடந்த 10 நாட்களுக்கு முன் விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரத்தை துண்டித்தனர் இது குறித்து பரம்புபட்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகம், அனுப்பானடி பின்வாரிய அலுவலகம் என பல்வேறு இடங்களில் அடைந்து மனுக்களை அழித்தனர். இந்நிலையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பொதுமக்கள் மிகவும் வேதனை அடைந்து தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் சாவதை தவிர வேறு வழியில்லை எனக் கூறியுள்ளனர்.

பரம்புபட்டி மக்களின் கோரிக்கை ஏற்ற மாவட்ட நிர்வாகம் மின் இணைப்பிற்கு ஏற்பாடு செய்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படும்.
பரம்புபட்டி கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட விவசாய எல்லாம் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளது தற்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் தண்ணீர் இன்றி பயிர்கள் வாடுகின்றன இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டத்தில் உள்ளோம் அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


பரம்புபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாய குடிமக்கள் மின் துண் புட்டினால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
உடனடியாக தமிழக அரசு தலையிட்டு தங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் இல்லாள் விலை நிலத்தில் இறந்து போவதை தவிர வேறு வழியில்லை என கூறுகின்றனர்.

