• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வானம் பார்த்த பூமியில் தண்ணீரைக் கண்டு கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்

சிவகங்கை மாவட்டம் வறண்ட வானம் பார்த்த பூமியாகும். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை பெய்யும் மழையை நம்பி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக சிவகங்கை மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கன மழையால் தாழ்வான பகுதியில் மழைநீர் சேர்ந்தது மட்டுமல்லாது நிலத்தடி நீரும் வெகுவாக உயர்ந்தது. இதன் தொடர்ச்சியாக வயல் வெளிகளிலும் தண்ணீர் தேங்கியது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள உடன்பட்டி கிராமத்தில் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாயில் கடந்த ஆண்டு குடிமராமத்து பெயரளவில் பார்க்கப்பட்டு முழுமை பெறாமல் இருந்து வந்தது. தற்போது பெய்த கனமழை காரணமாக வயல்வெளிகளில் நீர் நிரம்பி வழிகின்றது. முறையாக குடி மராமத்து பணி மேற்கொள்ளாததால் வயல்வெளிகளில் உள்ள நீர் கண்மாய்களில் சென்றடையாமல் வயல்வெளிகளில் வழிந்து விடுவதால் பல லட்சம் செலவில் கடன் பெற்று செய்திட்ட, சுமார் 160 ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்தது வருகிறதும். அரசு அதிகாரிகளின் முறையான திட்டமிடல் இல்லாமல் பார்க்கப்படும் அரசு பணியால் மழைக்கு ஏங்கி நின்ற விவசாயிகள் தற்போது வயல்வெளிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை கண்டு கண் கலங்கி நிற்கின்றனர்.

காந்தி ஜெயந்தியில் இருந்து ஒரு வார காலமாக தூய்மைப்பணி என்கின்ற பெயரில் பேரளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விவசாயிகள் சென்றடையவில்லை என்பதேயே இது காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.