புதுச்சேரி விவசாய தொழிலாளர் சங்கத்தில் விவசாயிகள் சேர்க்கை நடைமுறையை எளிமைப்படுத்தி தர வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசுக்கு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள விவசாய தொழிலாளர் நலச்சங்க உறுப்பினர் சேர்க்கை நடைமுறையை எளிமைப்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் மாவட்டத்தில் அகில இந்திய விவசாயி தொழிலாளர் சங்கம் சார்பில் காரைக்கால் மாவட்ட வேளாண்துறை அலுவலகம் நோக்கி 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயி தொழிலாளர் நல சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைமுறையை எளிமைப்படுத்த வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி பேரணையாக சென்று வேளாண்துறை துணை இயக்குனரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அப்பொழுது விவசாயிகள் அளித்த கோரிக்கைகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வேளாண்துறை துணை இயக்குனர் உறுதியளித்தார்.











; ?>)
; ?>)
; ?>)