டெல்டா பாசனத்திற்க்காக மேட்டுரில் கடந்த ஜூன் 12ம் தேதி மேட்டுர் காவிரி அணையிலிருந்து 92 ஆண்டாக தண்ணீர் திறக்கப்பட்டது. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்க்கு 2 மாதங்களுக்கு முன்பே கரூர் மாவட்டத்தில் காவிரியிலிருந்து பிரியும் பாசன வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டு இருக்க வேண்டும்.

அப்போதுதான் மற்ற கிளை வாய்க்கால்களில் தண்ணீர் சென்று பாசனம் செய்ய முடியும். ஆனால் கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், புஞ்சை தோட்டக் குறிச்சி பகுதியில் உள்ள வாய்கால்களில் தூர் வாரும் பணி மாவட்ட நிர்வாகம் சார்பில தற்போதுதான் துவங்கி நடை பெற்று வருகிறது. அதற்கு காவிரி தண்ணீர் கரூரை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. பிறகு எப்படி வாய்க்கால்களில் தண்ணீர் பாசனத்திற்க்கு செல்லும் என அப்பகுதி விவசாயிகள் குமுறி வருகின்றனர் இது குறித்து அப்பகுதி விவசாயி சுப்ரமணி கூறியதாவது. .
கடந்த ஆண்டும் காவிரி தண்ணீர் திறப்பதற்க்கு முன்பாகவே வாய்க்கால்கள் தூர் வார படாததால் பெறும் அளவில் விவசாயிகள் பாதிக்கப்பட்டோம். இந்த வருடமும் அதே நிலைதான் . முன்பு இப் பகுதியில் உள்ள விவசாயிகள் பணப்பயிர்களான வாழை, கரும்பு, வெற்றிலை கொடிக்கால் அதிக அளவில் சாகுபடி செய்து வந்தோம். காகித ஆலை கழிவுநீரால் எல்லா சாகுபடியும் வீணாகி போனது அதனால் வேறு வழியின்றி தற்போது கோரை சாகுபடி செய்தோம். அதுவும் 50 நாட்களாக தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கிறது. விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என கூறுகிறார்கள். ஆனால் இன்று விவசாயி நிலை என்ன?

இன்றும் இதே நிலைதான். கரூர் மாவட்டத்தில் முதல் காவிரி பாசன வாய்க்காலில் இன்று வரை தூர் வார வில்லை. இந்த வாய்க்காளில் இருந்து தான் பாப்புலர் வாய்க்கால், வாங்கல் வாய்க்காளுக்கு தண்ணிர் செல்லும். ஏற்க னவே இந்த வாய்க்கால்களில் காகித ஆலை கழிவுநீர், புகழூர் நகராட்சி கழிவுகள் தேங்கி சாக்கடையாக மாறி வருகிறது. காவிரி தண்ணீர் கூட கழிவுகள் சேர்ந்து விஷமாக மாறி குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை எதிர்காலத்தில் ஏற்பட உள்ளது.
அரசு அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் மினரல் வாட்டர் வாங்கி குடிப்பார்கள். சாதரண கிராமத்தான் குடிக்க தண்ணீருக்கு என்ன செய்வான். தொடர்ந்து விவசாயிகளை ஏமாற்றி முட்டாள் ஆக்காமல் இன்னும் ஒரு வாரத்திற்க்குள் நவீன கருவிகளை கொண்டு வாய்க்கால்களை தூர்வாரி விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றிட வேண்டும் என கூறினார்.