திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள எல்லப்பநாயக்கன்பட்டி புதூரை சேர்ந்த விவசாயி வரதராஜ் (வயது 53) தனது தோட்டத்தில் சோளம் பயிரிட்டுள்ளார்.
இவருக்கும் இவரது பக்கத்து ஊரான கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள சுரப்பநாயக்கனூரை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் ஈஸ்வரமூர்த்தி நிலப்பிரச்சனை ஏற்பட்டு வேடசந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் முன் விரோதம் காரணமாக ஈஸ்வரமூர்த்தி ஆத்திரத்தில் விவசாயி வரதராஜிக்கு சொந்தமான நிலத்தில் பயிரிட்டுள்ள சோளப்பயிர்களை அழிக்க 25 நபர்களை அழைத்து கொண்டு வரதராஜ் தோட்டத்திற்கு வந்து
சோளப்பயிர்களை அழித்து கொண்டிருக்கும் போது அதற்கு வரதராஜ் ஏம்பா இப்படி பன்றீங்க என்று கேட்டு சத்தம் போடவே அனைவரும் அங்கிருந்து கலைந் சென்று விட்டனர்.

மீண்டும் ஈஸ்வரமூர்த்தி அவரது மனைவி சோபா, மாமனார் பால்சாமி, அவரது அக்கா கணவர் மணிச்சந்திரன் மற்றும் டிராக்டர் டிரைவர் ரெங்கசாமி உள்ளிட்டோர் விவசாய நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்து தரக்குறைவான வார்த்தைகளில் பேசி விவசாயி வரதராஜை அடித்து உதைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
காயம் அடைந்த விவசாயி வரதராஜ் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து புகாரின் பேரில் எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



