நடிகை சமந்தா தென்னிந்திய சினிமா கொண்டாடும் ஒரு உச்ச நட்சத்திரம்.
தமிழை தாண்டி தெலுங்கில் இவர் நடித்துள்ள நிறைய படங்கள் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூலிக்கும். அவரது நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் 2 படத்திற்காக நிறைய விருதுகளை குவித்து வருகிறார் சமந்தா.
சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்த அவர் அங்கிருந்து Ameen Peer Dargahவிற்கு சென்றிருந்தார். பின் திருப்பதி சென்று அங்கேயும் சாமி தரிசனம் செய்திருந்தார்.இந்த நிலையில் நடிகை சமந்தா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
லேசாக சளி மற்றும் ஜொரம் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில டெஸ்ட் எல்லாம் எடுத்துள்ளார். தற்போது அவர் நன்றாக இருக்கிறாராம், வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாக அவரது மேனேஜர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.