• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரையில் துப்பாக்கி வைத்து மிரட்டி பணம் பறித்த பிரபல ரவுடி கைது..!

Byகுமார்

Oct 22, 2021

மதுரையில் பிரபல ரவுடியிடம் நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாநகர் சம்மட்டிபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சரத்குமார் என்பவர் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்துக்கு உட்பட்ட அரசரடி பகுதியில் நடந்து சென்ற ஹரிஹரசுதன் என்பவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி 1100ரூபாய் பணத்தை பறித்ததாக அளித்த புகாரின் பேரில், எஸ் எஸ் காலனி காவல்துறையினர் பிரபல ரவுடி சரத்குமாரை கைது செய்து அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டகளை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இவர் துப்பாக்கியை வைத்து வேறு ஏதும் குற்றச் செயல்களில் ஈடுபட்டாரா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.