• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சரிந்து வரும் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம்

ByA.Tamilselvan

Oct 2, 2022

மழைப்பொழிவு குறைந்த நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது.
தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. எனவே 2-ம் போக நெல்சாகுபடியை கருத்தில் கொண்டு தண்ணீர் திறப்பை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். வைகை அணையில் நீர்மட்டத்தை நிலை நிறுத்த முல்லைபெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். மேலும் நீர்திறப்பை படிப்படியாக குறைத்தனர். நேற்று 1555 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலை நீர்திறப்பு மேலும் குறைக்கப்பட்டு 1400 கனஅடிநீர் திறக்கப்பட்டது.