ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அவை போலியாகக் கூட இருக்கலாம் என்று பெரம்பலூரில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஏடிஎஸ்பி சுப்பிரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சார்பாக பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்டு பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர் மீனா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஏடிஎஸ்பி சுப்பிரமணி கலந்து கொண்டு பேசினார்.
உங்களது ஏடிஎம் பின் நெம்பர், சிசிவி நெம் பர்,ஆதார் கார்டு எண் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நம்பகத்தன்மை இல்லாத வேறு எவரிடமும் இவற்றை பகிர்ந்து கொள்ளக்கூடாது. உங்கள் ரகசியக் குறியீடு எண்ணை கடன் மற்றும் பற்று அட்டைமீது குறித்து வைக்கக்கடாது. இணைய தளத்திலோஅல்லது செல்போன் மூலமாகவோ உங்களது சுய விவரங்களை யார் கேட்டாலும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். முகம் தெரியாத நபர்களை இணையத்தில் நண்பர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். ஆன்லைன் மூலம் சலுகை விலையில் பொருட்கள் வாங்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவை சிலநேரம் போலியாக கூட இருக்கலாம்.
கணினி உள்ளிட்ட ஆன்லைன் குற்றங்கள் தொடர்பாக பாதிக்கப்படும் நபர்கள் பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் இன்ஸ்பெக்டர் செல்போன் நெம்பர் 94981 65579 மற்றும் ஏடிஎஸ்பி செல்போன் நெம்பர் 94981 43811 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டுகொண்டும், நேரிலும் புகார்களைத் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவித்தால் புகாரின்பேரில் விரைந்து நடவடிக்கை எடுக்க ப்படும் எனத் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து கரகாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சியுடன் பொதுமக்களு க்கு சைபர் கிரைம் குற்ற ங்கள் எவை எவையென விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.