• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

போலி வேலைவாய்ப்பு விளம்பரம்…ரயில்வே எச்சரிக்கை!…

ByA.Tamilselvan

Jan 11, 2023

ரயில்வே பாதுகாப்பு படையில் 19 ஆயிரத்து 800 காவலர் பதவிக்கான ஆட்சேர்ப்பு குறித்து சமூக ஊடகங்களில் தவறான செய்தி பரவுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
காவலர் பதவிக்கான ஆட்சேர்ப்பு தொடர்பாக வெளியான தகவல்களை மறுத்து ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ரெயில்வே பாதுகாப்பு படையில் 19 ஆயிரத்து 800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு குறித்து சமூக ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் கற்பனையான செய்தி பரப்பப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்புப்படையோ அல்லது ரயில்வே அமைச்சகமோ தங்களது அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் அல்லது எந்த அச்சு, மின்னணு ஊடகம் மூலமாகவும் அத்தகைய அறிவிப்பை வெளியிடவில்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே அந்த தகவல் போலியானது என்று கூறியுள்ள ரயில்வே, அனைவரும் அதை புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.