

மெட்ரோ ரயில் பயணிகள் வாட்ஸப்பில் டிக்கெட்களை பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் பயணிகள் டிக்கெட்டுகளை வாட்ஸ் அப் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க 8300086000 என்ற வாட்ஸப் எண் மூலம் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இந்த குறிப்பிட்ட எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் ஹாய் என்று அனுப்ப வேண்டும். அதில் டிக்கெட் எடுப்பது தொடர்பான தகவல்கள் இடம்பெறும்.
இதனைத் தொடர்ந்து நீங்கள் பயணியின் பெயர், புறப்படும் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் சென்று சேரும் ரயில் நிலையம் ஆகியவற்றை பதிவு செய்து வாட்ஸப் மூலமோ அல்லது யுபிஐ செயலி மூலமாகவோ பணம் செலுத்தினால் உங்களின் பயண டிக்கெட் உங்களது வாட்ஸ் அப் எண்ணிற்கு வந்துவிடும்.
