

அலங்காநல்லூர் பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளை விருப்பப்பட்டால் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் அமைய உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடத்திக் கொள்ளலாம் என மதுரை அலங்காநல்லூரில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் பேட்டி அளித்துள்ளார்.
மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் புதிய ஜல்லிக்கட்டு அரங்க பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எ.வ.வேலு பேசியதாவது..,
17.12.2023 க்குள் ஜல்லிகட்டு அரங்கபணிகள் முடிக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போது அரங்க பணிகள் 35சதவீதம் நிறைவடைந்துள்ளது.ஜல்லிக்கட்டு அரங்கத்தில் நுழைவு வாயில் வளைவு, காளை சிலை, செயற்கை நீருற்று, 50ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டப்பட உள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு வந்து செல்ல 22 கோடியில் புதிய சாலை அமைக்கப்படும். இதற்காக தனியார் இடங்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது. அதை விரைந்து நிலத்தை கையகப்படுத்த கூறியுள்ளேன்.
காளைக்கு மூக்கானங்கயிறு எப்படி முக்கியமோ அதுபோல எதிர்க்கட்சி ஆலோசனைகள் அரசுக்கு மிகவும் முக்கியம்.
ஆனால் எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் பீதியை தவறான கருத்துக்களை பரப்புகின்றன.
பேனா சிலையை பொறுத்தவரை தேசிய கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கி விட்டது. அதனால் நாளைக்கே பணிகளை தொடங்க முடியும்.
ஆனால் முதல்வரை பொறுத்தவரையில் பிரச்சனையாக எதையும் செய்ய வேண்டும் என நினைக்கவில்லை. மக்கள் விருப்பத்தின் பேரிலேயே அனைத்தையும் செய்வார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் முதலமைச்சர் ஆலோசித்து தீர்ப்பை பொறுத்து பேனா நினைவு சின்ன பணிகளை தொடங்க முடிவு செய்வார் எனவும்
அலங்காநல்லூர் பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் புதிதாக அமைய உள்ளம் ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடத்தப்படுமா என பொதுமக்கள் கேட்ட கேள்விக்கு மக்கள் விருப்பப்பட்டார் நடத்திக் கொள்ளலாம் என்று கூறினார் பொதுவாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை ஆய்வு செய்ய வரும்போது உள்ளூர் அமைச்சர் மூர்த்தி சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் தவறாமல் கலந்து கொள்வார். ஆனால் தற்போது அவர்கள் இருவரும் வராதது திமுகவினர் மற்றும் பொது மக்களிடையே கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.