• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இணையவழி சமூக வலைத்தள நிறுவனமான ஃபேஸ்புக், கடந்த ஆண்டு ‘மெட்டா’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்த நிறுவனம் வடிவமைத்து வரும் ‘மெட்டாவெர்ஸ்’ என்ற புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப இந்த புதிய பெயர் மாற்றப்பட்டுள்ளது.

மெட்டாவெர்ஸின் அறிவிப்பால் தொழில்நுட்ப நிறுவனங்கள் மெய்நிகர் தொழில்நுட்பத்தில் தங்களது கவனத்தை திருப்பி உள்ளன.உலகம் முழுவதும் மெட்டாவின் பக்கம் திரும்பியுள்ள அதே நேரத்தில், ஃபேஸ்புக் நிறுவனம் மெட்டா என்று பெயர் மாற்றப்படும் என மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்ததால், அந்நிறுவனம் ரூ.50,000 கோடி டாலர் முதலீட்டு மதிப்பை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இழந்துள்ளது.அத்துடன், பெயர் மாற்றம் செய்த ஒரே நாளில் ரூ.24,000 கோடி மதிப்பையும் அந்நிறுவனம் இழந்துள்ளது. மேலும், அதிக மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த ஃபேஸ்புக் (மெட்டா) 10-வது இடத்திற்கும் கீழ் சென்றுள்ளது.

இது தவிர, ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் விளம்பர கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றமும் மெட்டா நிறுவனம் தடுமாறுவதற்கு காரணமாக இருக்கிறது.ஆப்பிள் மற்றும் கூகுளின் புதிய விளம்பர கொள்கைகள் ஃபேஸ்புக் நிறுவனம், பயனர்கள் குறித்த சில முக்கிய தரவுகளை எடுப்பதற்கு தடை விதித்துள்ளது.ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அதிக லாபத்தை வழங்கி வந்த இந்த தரவுகளை தற்போது சேகரிப்பது கடினமாகி உள்ளதால் ஃபேஸ்புக் தனது மதிப்பை இழந்துள்ளது.