• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் ஜனவரி வரை நீட்டிப்பு

ByA.Tamilselvan

Sep 8, 2022

திருநெல்வேலி-தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த ரெயில் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்படும் வாரந்திர சிறப்பு கட்டண ரெயில் (எண்.06004). இந்த மாதம் 18, 25, அக்டோபர் 2, 9, 16, 23, 30 ஆகிய நாட்களில் இயக்கப்படும். மேலும் நவம்பர் மாதம் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளிலும் டிசம்பர் மாதத்தில் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளிலும், ஜனவரி மாதத்தில் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும். இந்த ரெயில் திங்கட்கிழமை காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
இதேபோல தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு 10.20 மணிக்கு சிறப்பு கட்டண ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 10.40 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது. இந்த ரெயில் வருகிற 19, 26, அக்டோபர் மாதம் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதியிலும் நவம்பர் மாதம் 7, 14, 21, 28 தேதியிலும், டிசம்பர் மாதம் 5, 12, 19, 26 மற்றும் ஜனவரி மாதம் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிமுதல் தொடங்குவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்மாவட்டத்திற்கு செல்லக்கூடியவர்கள் சிறப்பு ரெயிலில் முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணிக்கலாம். எழும்பூரில் இருந்து புறப்படக்கூடிய ரெயில்களில் இடம் நெருக்கடி இருக்கின்ற நிலையில் சிறப்பு ரெயில் வசதியை பயன்படுத்தலாம்.