• Thu. May 2nd, 2024

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சார நேரம் நீட்டிப்பு

Byவிஷா

Apr 15, 2024

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சார நேரத்தை நீட்டித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹ அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. இறுதி மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை முதற்கட்டமாக வருகிற 19ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் பிரசார நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சா{ஹ தெரிவித்துள்ளார். வழக்கமாக வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்பு தேர்தல் பிரசாரம் நிறைவு பெறும். அன்றைய தினம் மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடையும்.
ஆனால், தமிழ்நாட்டில் தற்போது தேர்தல் பிரசார நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் வரும் 17ஆம் தேதி மாலை 6 மணி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளலாம். வழக்கமாக பிரச்சாரம் மாலை 5 மணியுடன் ஒய்வடையும் நிலையில் கோடைகாலம் என்பதால் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹ_ தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *