• Tue. Mar 25th, 2025

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் நீட்டிப்பு?

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் நீட்டிப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார் முதலமைச்சர்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சில நாடுகளில் தொற்று அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் கூடுதல் தளர்வுகள் அளிப்பதா? அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பதா என்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தளர்வுகள் பற்றி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் 31-ஆம் தேதியுடன் கொரோனா பொதுமுடக்கம் தளர்வு முடிவடைய உள்ள நிலையில், முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.