சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட வந்த மாற்றுத்திறனாளிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதாவது மாத உதவித்தொகையை ரூபாய் 1,500-லிருந்து ரூபாய் 3000 ஆக உயர்த்தி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் இப்போராட்டத்தை இன்று (மார்ச் 22) முன்னெடுத்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரயில்கள், பேருந்துகள் மூலம் வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் சென்னை தலைமைச் செயலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.