• Fri. Apr 19th, 2024

விருதுநகரில் பாலியல் வன்கொடுமை: கைது நடவடிக்கை ஆறுதலை தருகிறது: கனிமொழி எம்.பி.

விருதுநகர் மாவட்டத்தில் வயது பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதலைத் தருகிறது என திமுக எம்.பி.

கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். இளம்பெண்ணை மிரட்டி வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த காதலன் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகர் என்ற பகுதியில் வசிக்கும் 22 வயது இளம்பெண் அங்கு உள்ள கார்மெண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

அதே மாவட்டத்தை சேர்ந்த ஹரிகரன் என்பவர் அப்பெண்ணை காதலிப்பதாக கூறி பழகி இருக்கிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹரிஹரன் அந்த பெண்ணை மெடிக்கல் குடோன் ஒன்றுக்கு அழைத்து சென்று அங்கு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அதை செல்போன் மூலம் படம் எடுத்து அனைத்து நண்பர்களுக்கும் பகிர்ந்ததாகவும் தெரிகிறது. மேலும் காதலித்த பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட போவதாக கூறி மிரட்டியுள்ளார்.

இதனை அடுத்து அவரது நண்பர்கள் மற்றும் பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் அந்த வீடியோவை பார்த்து பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் வீடியோவை காட்டி இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்த புகாரில் ஹரிகரன், அவரது நண்பர்கள், 4 பள்ளி மாணவர்கள் என மொத்தம் 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் சிறார் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *