• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சபரி மலைக்கு 17ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கம்

ByA.Tamilselvan

Nov 14, 2022

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை – பம்பை இடையே வரும் 17-ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தைக் காண தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் செல்வது வழக்கம். இவர்களின் வசதி கருதி சென்னையில் இருந்து பம்பைக்கு வரும் 17-ம் தேதி முதல் அதிநவீன மிதவை சொகுசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, சென்னையில் இருந்து பம்பைக்கு பிற்பகல் 3.30 மணி மற்றும் 4 மணி என 2 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் பெரியவர்களுக்கு ரூ.1,090, சிறியவர்களுக்கு ரூ.545 கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இந்த பேருந்து சேவையை வரும் ஜனவரி 18-ம் தேதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளின் இருக்கைகளை www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதேபோல, சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்தையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் பெரியவர்களுக்கு ரூ.575, சிறியவர்களுக்கு ரூ.288 கட்டணம் வசூலிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தனர்.