• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கட்டாயத் தடுப்பூசியால் வெடிக்கும் போராட்டம்… வேடிக்கை பார்க்கும் பிரதமர்

கனடா தலைநகர் ஒட்டாவாவின் முக்கியத் தெருக்கள் அனைத்தையும் லாரி ஓட்டுநர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள். அங்கு, திரும்பும் பக்கமெல்லாம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் நடத்தும் போராட்டம்தான் கனடா தலைநகர் ஒட்டாவாவை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. ஹாரன்கள், சைரன்கள், பட்டாசுகள் மூலம் அடிக்கடி ஒலியெழுப்பி போராட்டத்தைக் கொண்டாட்டமாக மாற்றியிருக்கிறார்கள் லாரி ஓட்டுநர்கள். 10 நாள்களுக்கு மேலாக நடக்கும் இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடிவருகிறது கனடா அரசு. திணறிவருகிறார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, கனடாவில் தொற்றுப் பரவலைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில் குறிப்பாக, பொது இடங்களுக்கு வருபவர்களும், பொதுப் போக்குவரத்தில் பயணிப்பவர்களும் கட்டாயம் தடுப்பூசிச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். லாரி ஓட்டுநர்கள் பயணம் மேற்கொள்ளவும் தடுப்பூசிச் சான்றிதழ் அவசியம்!' என்று கனடா அரசு உத்தரவிட்டிருந்தது. கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து, லாரி ஒட்டுநர்கள் பலரும் இதற்கு எதிராக குரல்கொடுக்கத் தொடங்கினர். கடந்த ஜனவரி 29-ம் தேதி அன்று, கனடா முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான லாரி ஓட்டுநர்கள் தலைநகர் ஒட்டாவாவை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர். அன்றிலிருந்து, தினசரி பல நூறு லாரி ஓட்டுநர்கள் ஒட்டாவாவை அடைந்தனர். ஒட்டாவாவின் சாலையோரங்களில் கூடாரம் அமைத்து போராட்டங்களில் ஈடுப்பட்டனர். கட்டாயத் தடுப்பூசி உத்தரவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். முதலில், லாரி ஓட்டுநர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில், நாள்கள் செல்லச் செல்ல கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான மனநிலையிலிருப்பவர்களும் கலந்துகொள்ளத் தொடங்கினர். இதனால் கனடா அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்தது. முன்னதாக,தலைநகரில் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்தோடு ரகசிய இடத்துக்குச் சென்றுவிட்டார்’ எனச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 நாள்களாக ஒட்டாவாவில் நடந்துவரும் இந்தப் போராட்டத்தால் கனடா அரசுக்குப் பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் மிகப் பெரிய இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. லாரி ஓட்டுநர்களோ, `கட்டாய தடுப்பூசி உத்தரவை நீக்கிக் கொண்டால் மட்டுமே, போராட்டத்தைக் கைவிடுவோம்’ என்பதில் உறுதியாக இருக்கின்றனர். அதனால், என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடிவருகிறது கனடா அரசு.
இந்த நிலையில், போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவரக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தி உத்தரவிட்டார் ஒட்டாவா மேயர் ஜிம் வாட்ஸன். “போராட்டக்காரர்களைவிட கவால்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், போராட்டங்கள் எல்லைமீறிச் சென்று கொண்டிருக்கின்றன. ஒட்டாவா நகரத்தை மீட்டெடுக்க அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார் ஜிம் வாட்ஸன்.

இதையடுத்து கனடா நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும்'' என்று வலியுறுத்தியதோடு லாரி ஓட்டுநர்களைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். பிப்ரவரி 8-ம் தேதி அன்று, தனது ட்விட்டர் பக்கத்தில்,கனடா மக்களுக்குப் போராட்டம் நடத்தவும், தங்கள் அரசாங்கத்துடன் உடன்படாமல் இருக்கவும், தங்கள் குரல்களை அரசாங்கத்துக்குக் கேட்கச் செய்யவும் உரிமை உண்டு. அந்த உரிமையை நாங்கள் எப்போதும் பாதுகாப்போம். ஆனால், நமது பொருளாதாரத்தையோ, ஜனநாயகத்தையோ அல்லது நமது சக குடிமக்களின் அன்றாட வாழ்க்கையையோ முடக்க அவர்களுக்கு உரிமை இல்லை. அது நிறுத்தப்பட வேண்டும்!” என்று பதிவிட்டிருக்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ.