• Tue. Sep 22nd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்ட விரிவாக்கம்-துவக்கி வைத்த எம்எல்ஏ விஜய்..,

ByP.Thangapandi

Sep 22, 2026

தமிழ்நாடு அரசின் காமராஜர் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது.,

சென்னையில் இந்த திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் துவக்கி வைத்துள்ள சூழலில், இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆர்.சி.பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய், மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு உணவுகளை பரிமாறி திட்டத்தை துவக்கி வைத்தனர்.,

தொடர்ந்து உசிலம்பட்டி, சேடபட்டி, செல்லம்பட்டி பகுதியில் உள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 4500 க்கும் அதிகமான மாணவ மாணவியர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் தினசரி காலை உணவு வழங்கப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.,