• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சாகச பயணம் செய்யும் ஜீப்புகளால் பரபரப்பு..,

ByS.Ariyanayagam

Dec 9, 2025

கொடைக்கானலில் சாகச பயணம் செய்யும் ஜீப்புகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் சாகச சுற்றுலா பயணம் செய்யும் ஜீப் சவாரி-10 ஜீப் டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளங்கி, கோம்பை பகுதியில் உள்ள பெப்பர் அருவிக்கு செல்வதற்கு வனப்பகுதி, ஆற்றைக் கடந்து அதன் பிறகு நடந்து செல்ல வேண்டும் இந்த இடத்திற்கு செல்வதற்கு சாகச சுற்றுலா சவாரி ஆப் ரோடு சவாரி என்ற பெயரில் சுற்றுலாப் பயணிகளை அழைத்து சென்று சாகச பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் நபர் ஒன்றுக்கு அதிகமாக பணம் வசூல் செய்கின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் சாகச சுற்றுலா என்ற பெயரில் ஈடுபட்ட ஜீப்களை சோதனையிட்டு விசாரணை மேற்கொண்டு விதி மீறல்கள் கண்டறியப்பட்டு 10 ஜீப் வாகனங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.