• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவேச பேச்சு

ByTBR .

Mar 15, 2024

அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து விடுவார்கள். கெடுக்க நினைப்பவர்கள் கெட்டு விடுவார்கள். சிவகாசியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஆவேச பேச்சு..,

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி சிவகாசி மாநகராட்சிக்குட்பட்டசிவகாசி கிழக்கு பகுதி, மேற்கு பகுதி, திருத்தங்கல் கிழக்கு பகுதி ,மேற்கு பகுதி குட்பட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் ஆலோசனை கூட்டம் கழக அமைப்பு செயலரும் ,மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் அமைச்சருமானகே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது .இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேசியதாவது..,

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, கழகத்தின் மூன்றாம் அத்தியாயம் கழக பொதுச்செயலாளர்புரட்சித் தமிழர் எடப்பாடி யார் பின்னால்அணி வகுத்து இருக்கின்ற இளைஞர் படை மற்றும் இளம் பெண்கள் படை, ,கழகப் பொறுப்பாளர்களின் பெரும் ஆதரவோடு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் எடப்பாடியார் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் இரட்டை இலை சின்னத்தில் மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஒன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து வரலாற்று சாதனை படைக்கும் பணியாக நமது பணி இருக்க வேண்டும். இந்தியாவிலேயே 52 ஆடுகள் கட்சி தொடங்கி இன்று வரை ஆலமரமாய் இருக்கும் அதிமுக தான் பெரிய கட்சி. தற்பொழுது இரண்டரை கோடி தொண்டர்களின் ஆதரவோடு பொதுச் செயலாளராக அண்ணன் எடப்பாடியார் அதிமுகவை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் கூட்டணியை நம்பி தான் தேர்தலில் நிற்கின்றன. அதிமுக மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் நிற்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தனியாக நிற்க வேண்டும் என்று ஒரு சட்டம் வந்தால் அதிமுகவை எவராலும் வெல்ல முடியாது. அதிமுகவை அழிக்க நினைப்பவர் அழிந்து விடுவார்கள் , கெடுக்க நினைத்தவர்கள் கெட்டுப் போய் விடுவார்கள்..எளிய தொண்டன் கூட அதிமுகவில் தான் முதன்மையான பதவிக்கு வர முடியும். எடுத்துக்காட்டு சிலுவம்பாளையத்து கிளை செயலாளராக இருந்து இன்று கழகப் பொதுச் செயலாளராக உருவெடுத்திருக்கும் அண்ணன் எடப்பாடியார் தான். 560 பொய்யான வாக்குறுதிகளை சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அரசு இதுவரை மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை, அரசு ஊழியர்கள் தினமும் வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். விளம்பரத்தை நம்பி மட்டுமே திமுக அரசு செயல்பட்டு வருகிறது, திமுக ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த தாலிக்கு தங்கம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் அறிவுத் திறனை ஊக்கப்படுத்த மடிக்கணினி, ,தாய்மார்களின் வேலைப்பளுவை குறைக்க மிக்ஸி கிரைண்டர் ஃபேன் வழங்கும் திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டு விட்டன. ஏழை மக்கள் பசி போக்க சென்னை முதல் கன்னியாகுமரி வரை அம்மா உணவகங்கள் நிறுவப்பட்டன.

இன்று அம்மா உணவகத்தின் அளவையும் குறைத்து, தரத்தையும் திமுக அரசு குறைத்து விட்டது. கர்ப்பமுற்ற தாய்மார்களுக்கு ரூபாய் 18000 மற்றும் குழந்தை பெற்றவுடன் அம்மா உணவு பெட்டகம் போன்ற சிறப்பான திட்டங்களையும் நிறுத்திவிட்டது இந்த திமுக அரசு. புரட்சித்தமிழர் எடப்பாடி யார் ஏழை எளிய மக்களின் மருத்துவ சிகிச்சைக்காக 2000 மினி கிளினிக்குகளை கொண்டு வந்தார். திமுக ஆட்சி வந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் மினி கிளினிக்குகள் அனைத்தையும் மூடிவிட்டார். அரசு பள்ளியில் படிக்கும் கிராமப்புற மாணவ, மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்க 7.5 சதவீதத்தில் வருடத்தில் 600 மாணவ மாணவிகள் படிக்க சட்டத்தை கொண்டு வந்தவர் எடப்பாடியார்.. தற்பொழது கருத்துக்கணிப்பு கருத்து திணிப்பு என்றெல்லாம் சொல்லுவார்கள். நாம் அதை நினைத்து சோர்ந்து விடக்கூடாது. கருத்துக்கணிப்பு என்பது ஒரு ஓட்டலில் உட்கார்ந்து கொண்டு நிர்ணயம் செய்யப்படும்.தற்பொழுது வருவது கருத்து கணிப்பு அல்லஅது கருத்து திணிப்பு . புரட்சித்தமிழர் எடப்பாடி யார் முன்னிலையில் இன்று மாநிலம் முழுவதும் இளைஞர் படை ஏராளமாக சேர்ந்து வருகின்றனர்.தமிழக மக்கள் அனைவரும் முதலமைச்சராக எடப்பாடி தான் வர வேண்டும் என்று மனதில் நினைத்து விட்டனர். தற்போது தமிழ்நாட்டில் உழைப்பாளிகள், பாட்டாளிகள், நெசவாளிகள், தீப்பெட்டி தொழிலாளர்கள்,அச்சக தொழிலல்கள்.என அனைத்து தொழில்களும் அழிந்து வருகின்றது. தொழிலதிபர்கள் திமுக அரசு மீதுகடும் விரக்தியில் உள்ளனர். இதற்கு காரணம் திமுக அரசின் திறனற்ற நிர்வாகத் திறமை, இதனால் தொழில்கள் அனைத்தும் நசிந்து வருகிறது.

எடப்பாடியார் ஆட்சியில் விவசாயிகளின் நலனுக்காக ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டன. ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. கண்மாயிகள் அகலப்படுத்தப்பட்டன. -ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட ராஜராஜ சோழனுக்கு அடுத்து ஏரிகளை தூர்வாரி நீர் நிலைகளில் நீரை சேமித்து வைத்த பெருமை எடப்பாடி யாருக்கே சேரும். இன்றைய திமுக ஆட்சியில் கன்மார்களை தூர்வாறுகிறோம், அகலப்படுத்துகிறோம் என்று அந்த மண்ணை கரையில் மெத்தாமல் எடுத்துச் சென்று விட்டு விடுகிறார்கள். இன்று தமிழ்நாடு முழுவதும் சொத்து வரி, பஸ் கட்டணம் , மின்சார கட்டணம், இடவரி, பத்திரப்பதிவு உயர்வு கட்டணம் என அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டு விட்டது. இந்த திரணற்ற திமுக அரசால் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு எதையும் செய்யும் எண்ணம் இல்லை . இந்த நிலை மாற வேண்டுமென்றால் நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுகவை தோற்கடிக்க வேண்டும். .அடுத்த பொது தேர்தலில் எடப்பாடி யார் முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும். அதற்கு முன்னோட்டமாக இந்த நாடாளுமன்றத் தேர்தலை முன்னோட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தற்பொழுது நெசவாளர் பிரச்சனை விஸ்வரூபமாய் எடுத்து வருகிறது, விருதுநகர் மாவட்டத்தில் நெசவாளர் சொசைட்டியில் சேலையை விற்றுவிட்டதாக திமுகவினர் போலி கணக்கு காட்டுகிறார்கள். எனவே கழக நிர்வாகிகள் திமுக அரசின் தீமைகளை மக்களிடம் எடுத்து சொல்லி இரட்டை இலைக்கு வாக்குகளை பெற இந்த நேரத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திமுக அரசு குடும்ப அரசியல் செய்து வருகிறது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவர் அம்மா அதன் பின் வந்த புரட்சித்தமிழர் எடப்பாடி குடும்ப அரசியல் செய்தத இல்லை .பொதுச் செயலாளர் எடப்பாடி யார் எளிமையான ஒரு விவசாயி யார் எந்தநேரம் வேண்டுமானாலும் அவரை எளிதில்சந்தித்து பிரச்சனையை சொல்லலாம். திமுக அரசின் மேல் கொதித்து போய் உள்ள மக்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் இரட்டை இலைக்கு பெற நாம் பகுபட வேண்டும். அதிமுக ஆட்சியில் தான் தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இருந்தது. எடப்பாடியார் ஆட்சியில் ஜாதி, மத மோதல்கள் இல்லை. .அதிமுக ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. இந்த நிலையை சிறுபான்மை மக்கள் அனைவரிடமும் எடுத்துக் கூறி இரட்டை இலைக்கு நாம் வாக்கு சேகரிக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று டெல்லியில் எடப்பாடியார் கையை ஓங்க செய்ய வேண்டும்.. அப்பொழுது தான் காவிரி முல்லைப் பெரியாறு, பாலாறு மேகதாது அணை பிரச்சனைகளை நாம் கையாள முடியும். அப்பொழுதுதான் தமிழர்களின் உரிமை மீட்கப்படும்..சென்னை வெள்ள பாதிப்பு, தென் மாவட்ட வெள்ளை பாதிப்பில் நேரடியாக களத்தில் இறங்கி மக்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக செய்து கொடுத்தவர் எடப்பாடியார். தற்பொழுதுள்ள சூழ்நிலையில் தென் மாவட்டம் ,மேற்கு மாவட்டம் , மத்திய மாவட்டம், சென்னை வாசி மக்கள் என எந்த மாவட்டம் எடுத்தாலும் எடப்பாடி யார் ஆட்சி தான் மீண்டும் மலரும் என்ற சூழ்நிலை இருந்து வருகிறது.அதிமுக இளைஞர் மற்றும் கழக நிர்வாகிகள் ,மகளிர் அணி பொறுப்பாளர்கள்திமுக ஆட்சியின் துரோகத்தையும் அதிமுக ஆட்சியின் பெருமையும் மக்களிடம் எடுத்து கூறிஇரட்டை இலைக்கே வாக்கு சேகரிக்க வேண்டும்.கடந்த 10 வருட அதிமுகவின் ஆட்சியில் புரட்சித் தலைவி அம்மா எடப்பாடி யாரின் நிர்வாக திறமையையும்,தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் அனைத்தையும் மக்களிடம் மீண்டும் மீண்டும் எடுத்துக் கூற வேண்டும். அப்பொழுது தான் இரட்டை இலையின் அருமை தெரியாதவர்கள் கூட தெரிந்துகொள்வார்கள். எனவே நாம் அனைவரும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கண் அசராமல் பணியாற்றி 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற செய்து வெற்றிக்கனியை எடப்பாடியார் கையில் ஒப்படைக்க வேண்டும் இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மேற்கு மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பிலிப் வாசு, மேற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் என்.எம். ரமணா மேற்கு மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் வி. எம்.விஜய் ஆனந்த்.மேற்கு மாவட்ட டாஸ்மார்க் அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுரேஷ் குமார்,பொதுக்குழு உறுப்பினர் செல்வின்மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஆர். கரை முருகன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் கே. கோட்டைப் பாண்டியன், ,மேற்கு மாவட்ட தகவல் பிரிவு செயலாளர் ஆர் பாண்டியராஜன், தலைவர் எம்., கே. என் செல்வம்,மேற்கு மாவட்ட கலை பிரிவு செயலாளர் எஸ்.மாரிமுத்து,மேற்கு பார் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையது சுல்தான், எம்.பி கிருஷ்ணமூர்த்தி, ,வி சரவணகுமார், தொகுதி வி கருப்புசாமி பாண்டியன்,தொகுதி வி கருப்பசாமி பாண்டியன்.எம் சாம் என்ற ராஜா அபினேஸ்வரன், சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் வீஆரோக்கியராஜ், .,வடக்கு ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. லட்சுமிநாராயணன், தெற்குஒன்றிய செயலாளர் ஜி பாலாஜி. ,,விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா துணை பேரவை துணைச் செயலாளர்களானஎம் எஸ் செல்வகுமரன், எஸ் கார்த்திக், ,தொகுதி வீ கணேசன்,எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர்கள்.சிவராஜ் துணைச் செயலாளர், மேற்கு மாவட்டஇளைஞர் பாசறைது. செயலாளர் அழகர் குமார், பைபாஸ் தங்கப்பாண்டி,மாண ரணி, இணைச் செயலாளர் முத்துராஜ்,மேற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கமல்குமார்,மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலர் மாயாண்டி, , எம் ஜி ஆர்இளைஞர் அணி துணைச் செயலாளர் கே.டி சங்கர் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை எம்.பி. கிருஷ்ணமூர்த்தி, வி.சரவணகுமார், தொகுதி வி.கருப்புசாமி பாண்டியன், தொகுதி வி.கருப்பசாமி பாண்டியன், எம். சாம் என்ற ராஜா அபினேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.