
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கணக்க னேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள புற்று நாகம்மாள் கோவில் நாக சித்தர் லட்சுமண சுவாமிகள் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவர் களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் மரம் நடும் விழா நடை பெற்றது. விழாவுக்கு . கோவில் நாக சித்தர் தலைமை வகித்தார். கிரீன் பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை முன்னிட்டு கல்குறிச்சி சிவனடியார்கள் சார்பில், திருவாசகம் முற்றோதல் நடந்தது. அதன் பிறகு நாக சித்தர் லட்சுமண சுவாமிகள் மரக்கன்றுகளை நட்டு வைத்து மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார். பக்தர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாரிச் செல்வம், மருது முருகன், திரைப்பட நடிகர் அயோத்தி குமார், பந்தல் ஜெயக்குமார் நெப்போலியன், பாண்டி , சுரேஷ் முருகன், ஆசிரியர்கள் குருசாமி, ஆறுமுகம் மற்றும் பலர் பங்கேற்றனர்.
