தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 106வது பிறந்தநாள் விழா சிவகாசி மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக கொண்டாடப்பட்டது. சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் மண்டலத்தில் விருதுநகர் ரோடு காளிமுத்துநகர், மேலரதவிதி தேவர்சிலை அருகில், சிவகாசி மண்டலத்தில் வேலாயுதரஸ்தா சாலை, சிவகாசி பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த புரட்சிதலைவர் எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ எம்.எஸ்.ஆர் ராஜவர்மன், சிவகாசி மாநகர பகுதிக் கழகச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், ஷாம்(எ) ராஜ அபினேஷ்வரன், சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஆரோக்கியம், புதுப்பட்டி கருப்பசாமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிலிப்வாசு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் பால பாலாஜி, வழக்கறிஞர் மாரீஸ்குமார், சிவகாசி முன்னாள் நகரக் கழகச் செயலாளர் அசன்பதூருதீன், தலைமைக் கழக பேச்சாளர் சின்னத்தம்பி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்ஜி.ஓ காலனி மாரிமுத்து, திருத்தங்கல் கூட்டுறவு சங்க வங்கி தலைவர் ரமணா, திருத்தங்கல் முன்னாள் நகர செயலாளர் முருகேசன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் கட்சி நிர்வாகிகள் விஸ்வநத்தம் மணிகண்டன், இளநீர் செல்வம், சிவகாசி முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் காமாட்சி, திருமுருகன் உட்பட மாநகர, ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு பணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிவகாசியில் எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு முன்னாள். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்த மரியாதை








